புதுடெல்லி,
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, பலரிடமிருந்து சுமார் 3 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், வெளிநாடு செல்ல நீதிமன்ற அனுமதி பெற வேண்டும் என்ற ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி அவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.