சென்னை,
தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஐ.ஜி.யாக பணியாற்றும் பொன் மாணிக்கவேல் இன்று (வெள்ளிக்கிழமை) ஓய்வுபெறுகிறார். இதையடுத்து, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு புதிய ஐஜியாக அபய்குமார் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அபய்குமார் சிங் தமிழ்நாடு காகித நிறுவனத்தின் ஊழல் கண்காணிப்பு ஒழிப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.