சென்னை வானகரம், சக்தி நகரை சேர்ந்தவர் ரகுராம். இவர் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. அதில் ஆன்லைனில் குறைந்த விலையில் தங்கம் விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும் அதில் குஜராத்தில் உள்ள தனியார் வங்கியின் வங்கி கணக்கு குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த 'லிங்கை கிளிக்' செய்த ரகுராம், அதில் கேட்கப்பட்ட தனது வங்கி கணக்கு குறித்த தகவல்களை பதிவு செய்தார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுபற்றி ரகுராம் விசாரித்தபோது, தனது செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிய நபரே நூதன முறையில் தனது வங்கி கணக்கில் இருந்த பணத்தை 'அபேஸ்' செய்தது தெரிந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் அரும்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.