தமிழக செய்திகள்

நாகர்கோவிலில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

நாகர்கோவிலில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

நாகர்கோவில் அருகே உள்ள தம்மத்துகோணம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் கடந்த 9-6-2011 அன்று அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த  சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சகோதரர்கள் மணிகண்டன், பாபு மற்றும் அய்யப்பன் ஆகிய 3 பேர் மீது ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு நாகர்கோவில் கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு கடந்த 2019-ம் ஆண்டு 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே கோர்ட்டு தண்டனையை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் 3 பேரும் மேல்முறையீடு செய்தனர். வழக்கு விசாரணை நடந்ததால் 3 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இந்த நிலையில் நாகர்கோவில் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐகோர்ட்டு உறுதி செய்து குற்றவாளிகள் 3 பேரும் 2 வார காலத்திற்குள் சரணடைய வேண்டும் என்று கூறியது. ஆனால் அய்யப்பன் மட்டும் சரண் அடைந்தார். மணிகண்டன் மற்றும் பாபு ஆகியோர் தலைமறைவாகிவிட்டார்.

இதைத் தொடர்ந்து 2 பேரையும் போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த 6-ந் தேதி பாபு போலீசில் பிடிபட்டார். இந்த நிலையில் மணிகண்டனை நேற்று போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ஒரு ஆண்டுக்கு பிறகு மணிகண்டன் கைதாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து