தமிழக செய்திகள்

திருநெல்வேலியில் திருட்டு வழக்கில் தலைமறைவானவர் கைது

வள்ளியூர் பகுதியில் திருட்டு வழக்கில் ஈடுபட்ட துலுக்கர்பட்டியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.

தினத்தந்தி

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு திருட்டு வழக்கில் ஈடுபட்ட துலுக்கர்பட்டியை சேர்ந்த தங்கராஜ் (வயது 45) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 1 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் அவருக்கு, வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தங்கராஜை, வள்ளியூர் காவல்துறையினர் தேடிவந்த நிலையில் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து