தமிழக செய்திகள்

மாம்பலம் அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த ஏ.சி. மெக்கானிக் பலி

மாம்பலம் அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த ஏ.சி. மெக்கானிக் பலியானார்.

தினத்தந்தி

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 17). ஏ.சி. மெக்கானிக்கான இவர், தனது அண்ணன் கார்த்தியுடன் மெரினா கடற்கரைக்கு வந்தார். பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பினர். இதற்காக இருவரும் பஸ் மூலம் கடற்கரை ரெயில் நிலையம் வந்து, அங்கிருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயிலில் சென்றனர். பிரசாந்த் ரெயில் படிக்கட்டு அருகே நின்று பயணம் செய்தார்.

கோடம்பாக்கம் - மாம்பலம் ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது பிரசாந்த் திடீரென ஓடும் ரெயிலில் இருந்து தவறி தண்டவாளத்தின் அருகே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய அண்ணன், அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினார். பின்னர் சக பயணிகள் உதவியுடன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய தம்பியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரசாந்த் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி மாம்பலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து