தமிழக செய்திகள்

சென்னை ஐகோர்ட்டில் 5 நிரந்தர நீதிபதிகள் பதவி ஏற்பு

சென்னை ஐகோர்ட்டில் 5 நிரந்தர நீதிபதிகள் பதவி ஏற்றுக் கொண்டனர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை ஐகேர்ட்டில், கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை வெவ்வேறு நாட்களில் கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்ற ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சவுந்தர், சுந்தர் மோகன், கே.குமரேஷ்பாபு ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து இந்த 5 பேரும் நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்கும் நிகழச்சி சென்னை ஐகேர்ட்டில் இன்று மாலை நடந்தது. அப்பேது ஐகேர்ட்டின் தலைமை பதிவாளர் எம்.ஜேதிராமன், ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை முதலில் வாசித்தார். பின்னர், இந்த 5 நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்க ஒப்புதல் அளித்து கவர்னர் பிறப்பித்த உத்தரவை வாசித்தார்.

இதை தெடர்ந்து, ஒவ்வெரு நீதிபதிகளாக பதவி ஏற்க வந்தனர். அவர்களுக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், ஐகேர்ட்டு நீதிபதிகள், மத்திய, மாநில அரசு வக்கீல்கல், மூத்த வக்கீல்கல், வக்கீல்கள், பதவி ஏற்றுக் கெண்ட நீதிபதிகளின் உறவினர்கள் என்று ஏராளமானேர் கலந்துக் கெண்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு