தமிழக செய்திகள்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஒரு கோரிக்கை ஏற்பு - தமிழக அரசு

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளில் ஒன்றை ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

மின் கட்டண உயர்வால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகும் எனவும், இதனால் தொழில்கள் நிரந்தரமாக முடங்கிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் 5 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் 5 கோரிக்கைகளில் ஒன்றை ஏற்று அதனை நடைமுறைப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதில் மின் இணைப்பு 3Bல் இருந்து 3(A1) TARIFF க்கு மாற்றுவதற்கு 12 KW கீழ் உள்ள நிறுவனங்களும் நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் தாழ்வழுத்த நிலை கட்டணத்தை பழைய கட்டண முறையாக அமல்படுத்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து