தமிழக செய்திகள்

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

பெரியார் பிறந்த நாளையொட்டி தர்மபுரியில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது.

தினத்தந்தி

தர்மபுரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் பெரியார் பிறந்த நாள் சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி பெரியார் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பெரியார் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து கலெக்டர் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் அலுவலக பணியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், தொழில் முனைவோர்கள் உள்ளிட்ட அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்