தமிழக செய்திகள்

விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலியானார்.

தினத்தந்தி

மோகனூர்:

மோகனூர் அருகே உள்ள வலையபட்டி ஊராட்சி குரும்பப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 63), கூலித்தொழிலாளி. இன்று இவர் தனது மொபட்டில் வலையபட்டியில் உள்ள மருந்து கடைக்கு, மருந்து வாங்க சென்று கொண்டிருந்தார். நாமக்கல்-திருச்சி ரோட்டை கடக்க முயன்ற போது, திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த டாரஸ் லாரி ஒன்று கிருஷ்ணமூர்த்தியின் மொபட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தியை அங்கிருந்தவர்கள் மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கெண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணமூர்த்தியின் மனைவி தாமரைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில், மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது