தமிழக செய்திகள்

வாகனம் மோதி பெண் படுகாயம்

வாகனம் மோதி பெண் படுகாயம்

மோகனூர்:

நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள வளையப்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே நேற்று ஒரு பெண் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் பெண் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த பெண் அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பெண் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு, இந்த பெண் குறித்த தகவல் தெரிந்தால் மோகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என கேட்டு கொள்ளப்பட்டது.