தமிழக செய்திகள்

பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு

பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் இறந்தார்.

மதுரை மாவட்டம் திருவாதவூரை சேர்ந்தவர் கர்ணன் (வயது 52). டிரைவர். இவரது மனைவி மாலதி (43). சம்பவத்தன்று கர்ணன் தனது மனைவியுடன் சிவகங்கையை அடுத்த தமராக்கி கிராமத்திற்கு ஆட்டோவில் வந்தார். தமராக்கி-பாசாங்கரை இடையே வந்த போது எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கர்ணன், மாலதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக வந்தர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி கர்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். மாலதி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்