தமிழக செய்திகள்

புதுச்சத்திரம் அருகே அரிசி மூட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

புதுச்சத்திரம் அருகே அரிசி மூட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

திருவண்ணாமலையில் இருந்து நாமக்கல்லுக்கு கோழி தீவனத்திற்கு பயன்படும் குருணை அரிசி 6 டன் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. இந்த லாரி நேற்று காலை நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென முன்பக்க டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே உள்ள தடுப்புசுவரில் மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் டிரைவர் கோகுல் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதையடுத்து லாரியில் இருந்த அரிசி மூட்டைகளை மற்றொரு லாரியில் மாற்றி, லாரியை அப்புறப்படுத்தினர். இதுதொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...