தமிழக செய்திகள்

எருமப்பட்டி அருகேமொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே மொபட் மீது மேட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கூலித்தொழிலாளி

எருமப்பட்டி அருகே மேட்டுப்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் நடராஜன் என்கிற கஜேந்திரன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் நேற்று ஆங்கில புத்தாண்டை கொண்டாட வளையப்பட்டிக்கு கேக் வாங்குவதற்காக மெபட்டில் சென்றார்.

பின்னர் கேக் வாங்கி விட்டு முகாமிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மேட்டுப்பட்டி அருகே சென்றபோது, திருச்சியில் இருந்து வளையப்பட்டி நோக்கி வேகமாக வந்த மேட்டார்சைக்கிள் கஜேந்திரன் ஓட்டி சென்ற மெபட் மீது மோதியது.

விசாரணை

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த கஜேந்திரன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சென்ற எருமப்பட்டி போலீசார் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைகாக நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து பலியான கஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...