தமிழக செய்திகள்

விபத்தில் வாலிபர் சாவு

விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.

சாயல்குடி, 

ராமநாதபுரம் அருகே வேதாளை கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து மகன் விஜயகுமார் (வயது 30). சிக்கல் அருகே சிறைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் சூர்யா (20). இருவரும் மோட்டார்சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சிக்கல் டாஸ்மாக் அருகே கேரளாவில் இருந்து ராமேசுவரத்திற்கு மீன் ஏற்றி வந்த வேன், மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த சூர்யா ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்ச பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சிக்கல் இன்ஸ்பெக்டர் முருகதாசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.