தமிழக செய்திகள்

சூளகிரி அருகேமோட்டார் சைக்கிள் மீது பால் வண்டி மோதி வாலிபர் பலி2 பேர் படுகாயம்

சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சீபம் கிராமத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 19). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ராமன் (18), மற்றும் மணி (20) ஆகிய 3 பேர் நேற்று இரவு தங்களது பணியை முடித்து கொண்டு ஒரே மோட்டார் சைக்கிளில் சூளகிரி நோக்கி சென்றனர்.

அப்போது வழியில் கூலியாளம் பஸ் நிறுத்தம் அருகே வளைவில் திரும்பியபோது அந்த வழியாக வந்த ஒரு பால் வண்டி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த ராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகஇறந்தார்.

மேலும் மற்றொரு ராமன் மற்றும் மணி ஆகியோர் படுகாயம் அடைந்து தவித்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்