தமிழக செய்திகள்

ஓசூர் அருகேமோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; பள்ளி ஆசிரியர் பலிமற்றொரு ஆசிரியர் படுகாயம்

தினத்தந்தி

ஓசூர்:

ஓசூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மாதி பள்ளி ஆசிரியர் பலியானார். அவருடன் வந்த மற்றொரு ஆசிரியர் படுகாயம் அடைந்தார்.

பள்ளி ஆசிரியர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்- பாகலூர் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சிவசுப்பிரமணியம். சம்பவத்தன்று இவர் இயற்பியல் ஆசிரியரான காமினேனி கோபி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஓசூர்- பாகலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கன்டெய்னர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சிவசுப்பிரமணியம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

டிரைவர் கைது

அவருடைய நண்பர் காமினேனி கோபி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்தவரை மீட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து குடிபோதையில் லாரியை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய பீகார் மாநிலத்தை சேர்ந்த டிரைவர் மனுஷ்ஷா (33) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்