தமிழக செய்திகள்

நாமக்கல்லில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்; கட்டிட மேஸ்திரி பலி

நாமக்கல்லில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்; கட்டிட மேஸ்திரி பலி

கரூர் பஞ்சமாதேவி குடித்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 21-ந் தேதி வெண்ணந்தூரில் படித்து வரும் தனது மகன்களுக்கு பள்ளி மாற்றுச்சான்றிதழ் வாங்க வெண்ணந்தூர் சென்றார். பின்னர் மோட்டார் சைக்கிளில் நாமக்கல் வழியாக கரூர் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

நாமக்கல்- மோகனூர் சாலை அய்யப்பன் கோவில் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும், மணிகண்டன் ஓட்டிசென்ற மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதி கொண்டன.

இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனுக்கு இங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து அவரது மனைவி யசோதா (29) கொடுத்த புகாரின்பேரில் நாமக்கல் பேலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு