தமிழக செய்திகள்

திறனாய்வு தேர்வில் மாணவர்கள் சாதனை

திறனாய்வு தேர்வில் சிவகிரி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

தினத்தந்தி

சிவகிரி:

தேசிய திறனாய்வு தேர்வில் சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் கீர்த்தனா, சக்தி பார்கவி, சுமித்ரா, மாணவர் கார்த்திகேயன் ஆகிய 4 பேரும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா ரூ.12 ஆயிரம் வீதம் உதவித்தொகை வழங்கப்படும். இப்பள்ளியில் தமிழ்நாடு கிராமப்புற மாணவர்களின் திறமை தேடல் தேர்வில் மாணவிகள் ஹரணி தங்கம், ரவீணா ஆகியோர் தேர்ச்சி பெற்றனர். சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பள்ளிச் செயலாளர் தங்கேஸ்வரன், சிவகிரி சேனைத்தலைவர் மகாசபை தலைவர் மாரியப்பன், துணைத் தலைவர் மூக்கையா, பொருளாளர் ஆறுமுகம், பள்ளி தலைமை ஆசிரியர் சக்திவேலு மற்றும் பள்ளியின் கல்விக்குழு, அறப்பணிக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரிய-ஆசிரியைகள் பாராட்டினர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு