தமிழக செய்திகள்

"போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்யும் சட்டம் இன்னும் ஒரு வாரத்தில் நடைமுறைக்கு வரும்" - அமைச்சர் மூர்த்தி தகவல்

பத்திரப்பதிவுத்துறையில் உள்ள குறைகள் விரைவில் சரிசெய்யப்படும் என பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரை,

மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள சொக்கிகுளம், தல்லாகுளம் சார்பு அலுவலகங்களில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, பத்திரப்பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து பின்னர் நேரடியாகப் பதிவு செய்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து பத்திரப்பதிவுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பத்திரப்பதிவுத்துறையில் உள்ள குறைகள் சரிசெய்யப்படும் என்றும், போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்யும் சட்டம் இன்னும் ஒரு வாரத்தில் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்தார்.

பதிவுத்துறையில் கடந்த ஆண்டு 5,440 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாகவும், 10 லட்சத்து 92 ஆயிரம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், இந்த ஆண்டு 7,865 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது, 16 லட்சம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை