தமிழக செய்திகள்

கொறடா உத்தரவை மீறி சட்டசபையில் வாக்களித்த 11 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை - சபாநாயகரிடம் தி.மு.க. வலியுறுத்தல்

சென்னை தலைமைச் செயலகத்துக்கு தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்கதமிழ்ச் செல்வன் நேற்று வந்திருந்தார். அங்கிருந்த நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:-

சென்னை,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை உடனடியாக தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை மனு அளித்திருக்கிறோம். இந்த பிரச்சினையில் 3 ஆண்டுகள் ஆகியும் தகுதி நீக்க நடவடிக்கையை இழுத்தடித்தது தவறு. இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே இருக்கிறது. எனவே அவசரமாக அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பதே கோரிக்கையின் சாராம்சம்.

ஒரு கட்சியின் சார்பாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ.க்கள், கொறடா உத்தரவை மீறி சட்டசபையில் மாற்றி வாக்களித்தாலே தேர்ந்தெடுத்த மக்களையும் அவமதித்ததாகவே அர்த்தம். எனவே சட்டப்படி 15 நாட்களுக்குள் அவர்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

நம்பிக்கைதான் வாழ்க்கை. எனவே சட்டப்பேரவை தலைவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மதிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...