சென்னை,
தமிழகத்தில் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஆக்சிஜன் உற்பத்திக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சென்னையில் உள்ள சில புகழ்பெற்ற தனியார் மருத்துவமனைகள் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை நிறுத்தி வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவை உண்மையாக இருக்கக்கூடாது என்று நம்புவோம்.
தமிழ்நாட்டில் அரசு, தனியார் மருத்துவமனைகள் எதிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்றநிலை உருவாக்கப்பட வேண்டும்; ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக ஒரு நோயாளி கூட உயிரிழக்கவில்லை என்பது தான் பெருமிதம் அளிக்கும் நிலையாக இருக்கும்.
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு அறிவித்துள்ள தினசரி ஒதுக்கீடான 419 டன் ஆக்சிஜனை இப்போதில் இருந்தே பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஆக்சிஜன் உற்பத்திக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய வேண்டும் என்று அதில் டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.