தமிழக செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர், மதுராந்தகம், காஞ்சீபுரம் தொகுதிகளை சேர்ந்த தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டம் உத்திரமேரூரில் நடந்தது. இதற்கு காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் கன்னியப்பன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

முன்னதாக பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தில் கண்டிப்பாக விஜயகாந்த் கலந்து கொள்வார். விஜய பிரபாகரன் தேர்தலில் போட்டியிடுவாரா என்று கேட்ட போது தேர்தல் தேதி அறிவிக்கப்படும் போது தே.மு.தி.க. பொதுக்குழு, செயற்குழு கூடி இதுகுறித்து அறிவிக்கப்படும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவவாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை