தமிழக செய்திகள்

உரிமை கோரப்படாத தனித்தேர்வர்களின் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்களை அழிக்க நடவடிக்கை: அரசுத் தேர்வுகள் இயக்ககம்

உரிமை கோரப்படாத தனித்தேர்வர்கள் எழுதிய பிளஸ்-2 மதிப்பெண் பட்டியலை அழிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

பள்ளிப்படிப்பை முறையாக முடிக்காமல், 8, 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதுவதற்காக ஏற்பாடுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் மேற்கொள்ளும். இந்த நடைமுறையில், கல்வியை இடையில் நிறுத்தியவர்கள் அல்லது முதல்முறையாக பொதுத்தேர்வை தனித்தேர்வுகளாக எழுத விரும்புபவர்கள் தனித்தேர்வர்களாக கருதப்படுவார்கள். இந்தநிலையில் தனித்தேர்வர்கள் எழுதிய பிளஸ்-2 மதிப்பெண் பட்டியலை அழிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குனர் சசிகலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான பிளஸ்-2 பொதுத் தேர்வு மற்றும் துணைத்தேர்வுகள் எழுதிய தனித்தேர்வர்களின் உரிமைக் கோரப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் அழிக்கப்பட உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து