தமிழக செய்திகள்

“வேளாண் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை” - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதி

வேளாண் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உறுதியளித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக சட்டபேரவையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று தொடங்கியது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் வேளாண் பட்டப்படிப்பு படித்து முடித்துள்ள இளைஞர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் துறையில் உள்ள காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும் சோளிங்கர் தொகுதி, கொடைக்கல் கிராமத்தில் 94 லட்சம் மதிப்பில் துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த 10 மாத காலத்தில் 27 லட்சம் மெட்ரிக் டன் வேளாண் விளை பொருட்கள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டதாக கூறிய அவர், தேவைக்கேற்ப ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் உருவாக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு