சென்னை,
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
இலங்கை கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்கள் 22 பேரை கைது செய்துள்ளனர். மேலும், அவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். மத்திய வெளியுறவுத்துறை இந்த விவகாரத்தில் தலையிட்டு, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதுடன், உடனடியாக நாடு திரும்பவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.