மதுரை
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனுடன் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த 3 நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாட்டால் தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் டி.குண்ணாத்தூரில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-
வரலாற்றில் இந்நாள் பொன்நாளாகும். கடந்த 1977ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதியன்று முதன் முதலாக முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். பணியாற்றிய நாளாகும்.
தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு ஒன்பதாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 4 சதவீதம் பேருக்கு மட்டுமே 2வது டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது மூன்றாவது அலை வருவதற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.