தமிழக செய்திகள்

ரவுடிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும்-போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை

வேலூர் மாவட்டத்தில் ரவுடிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என்று போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அறிவுரை வழங்கினார்.

வேலூர் மாவட்டத்தில் ரவுடிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என்று போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அறிவுரை வழங்கினார்.

ஆய்வுக்கூட்டம்

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குற்றங்கள் தடுப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திருநாவுக்கரசு, பழனி, ராமமூர்த்தி, இருதயராஜ், மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அனைத்து இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பேசியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்.

கோர்ட்டுகளில் உள்ள வழக்குகளில் இறுதி விசாரணை அறிக்கையை நிலுவையின்றி தாக்கல் செய்ய வேண்டும்.

ரவுடிகளை கண்காணிக்க வேண்டும்

ரவுடி பட்டியல்களில் உள்ள ரவுடிகளை போலீசார் கண்காணிக்க வேண்டும். ஜாமீனில் வெளியே வந்தபின்னரும் அவர்களின் செயல்பாடுகளை கண்காணித்து குற்றம் நடைபெறும் முன்னர் தடுக்க வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்