தமிழக செய்திகள்

நடிகர் அஜித்தின் தாயார் மறைவு: முதல்-அமைச்சர் விஜய் இரங்கல்

சென்னை பாலவாக்கத்தில் உள்ள அஜித் வீட்டில் அவரது தயாருக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரா அஜித்தின் தாயார் மோகினி(84) இன்று காலை சென்னையில் வயது மூப்பு காரணமாக காலமானார். இந்த செய்தி அஜித் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்தின் தாயார் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தமிழக முதல்-அமைச்சர் விஜய் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

’அருமை நண்பர் அஜித் குமாரின் தாயார் மோகினி அம்மையார் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்திருக்கிறார்.

சென்னை பாலவாக்கத்தில் உள்ள அஜித் வீட்டில் அவரது தயாருக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளன.

SCROLL FOR NEXT