கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

தேர்தல் பிரசாரத்தின்போது தனது விஷம் கலந்த பழச்சாறு கொடுத்துவிட்டார்கள் என்று கூறி நடிகர் மன்சூர் அலிகான் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தார்.

தினத்தந்தி

சென்னை,

வேலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். பலாப்பழம் சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார். தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட மன்சூர் அலிகான், குடியாத்தத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதிகளவு உடல் சோர்வுடன் வயிற்று வலி மற்றும் கால் வலியும் அவருக்கு இருந்ததால், டாக்டர்கள் அவரை சில நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தினார். பின்னர் டாக்டர்கள் ஆலோசனைப்படி மன்சூர் அலிகான், சென்னை அசோக்நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில் பிரசாரத்தின்போது தனது விஷம் கலந்த பழச்சாறு கொடுத்துவிட்டார்கள் என்று கூறியும் பரபரப்பு ஏற்படுத்தினார்.

இந்தநிலையில் நடிகர் மன்சூர் அலிகான் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் தொகுதிக்கு செல்ல முடிவெடுத்துள்ளதாகவும், அதனால் தான் அவர் உடனடியாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்றும், தேர்தல் முடிந்ததும், அவரது உடல்நிலைக்கேற்ப சிகிச்சை பெறுவார் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து