சென்னை,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தின் போது 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கினை அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என்று ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் தகவல் தெரிவித்துள்ளார். இதன்படி ஜனவரி மாதம் விசாரணைக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆஜராகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்த், இதற்கு சமூக விரோதிகளே காரணம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.