தமிழக செய்திகள்

சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் ஆலோசனை

சென்னை போயஸ் இல்லத்தில் நடிகர் ரஜனிகாந்த் தமிழருவி மணியன் மற்றும் அர்ஜுன மூர்த்தியுடன் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை,

அரசியலுக்கு வருவதாக கடந்த 2017ல் கூறிய ரஜினி, கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது அரசியல் வருகையை உறுதிப்படுத்தியுள்ளார். வரும் ஜனவரியில் புதிய கட்சி தொடங்கப்போவதாகவும், டிசம்பர் 31 ஆம் தேதி அதற்கான அறிவிப்பை வெளியிடப்போவதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார். மேலும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக முன்னாள் பாஜக நிர்வாகி அர்ஜுன மூர்த்தியையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமித்துள்ளார். தொடர்ந்து, நேற்று பெங்களூருவில் தனது அண்ணன் சத்ய நாராயணாவை சந்தித்து ஆசி பெற்றார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை போயஸ் இல்லத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனமூர்த்தி மற்றும் மேற்பார்வையாளர் தமிழருவி மணியனுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். புதிதாக தொடங்கவிருக்கும் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்