தமிழக செய்திகள்

அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு ஆஜராகாத நடிகர் ஸ்ரீகாந்த்

முறைகேடான பணப்பறிமாற்ற சட்டத்தின் கீழ் ஸ்ரீகாந்த் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

போதைப் பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியில் உள்ளனர். இந்த நிலையில், முறைகேடான பணப்பறிமாற்ற சட்டத்தின் கீழ் அவர்கள் இருவர் மீதும் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. அவர்கள் இருவரையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. நேற்று, நடிகர் ஸ்ரீகாந்த் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனில் கூறப்பட்டிருந்தது.

ஆனால், ஸ்ரீகாந்த் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் சார்பில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஒரு கடிதம் கொடுக்கப்பட்டது. அந்த கடிதத்தில், அமலாக்கத்துறை அழைக்கும் மற்றொரு நாளில் விசாரணைக்கு ஆஜராவதாக கூறப்பட்டிருந்தது. இதேபோல, நடிகர் கிருஷ்ணா நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனில் கூறப்பட்டிருந்தது. கிருஷ்ணா இன்று ஆஜராவாரா? அல்லது நடிகர் ஸ்ரீகாந்த் போல கடிதத்தை கொடுத்து இன்னொரு நாள் ஆஜராக அவகாசம் கேட்பாரா என்பது தெரியவில்லை.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து