தமிழக செய்திகள்

நடிகர் எஸ்.வி.சேகர் 20-ந் தேதி கரூர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

நடிகர் எஸ்.வி.சேகர் கரூர் கோர்ட்டில் 20-ந் தேதி ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

கரூர்,

பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் சமூக வலைத்தளத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்டார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.

இது சம்பந்தமாக போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட எஸ்.வி.சேகர் மீது கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்திய குடியரசு கட்சியின் மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். ஆனால் நேற்று எஸ்.வி.சேகர் கோர்ட்டுக்கு வரவில்லை.

அவருக்கு பதில் அவரது வக்கீல் செந்தில்குமார் வந்தார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பையா, வருகிற 20-ந் தேதி எஸ்.வி.சேகர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். இல்லை என்றால் பிடிவாரண்டு பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்