தமிழக செய்திகள்

முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் மறைவையடுத்து, நடிகர் விஜய்சேதுபதி நேரில் ஆறுதல்

முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் மறைவையடுத்து, நடிகர் விஜய்சேதுபதி நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த 12-ந் தேதி காலமானார். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிலுவம்பாளையத்தில் தனது தாயாரின் இறுதி அஞ்சலியில் பங்கேற்றார்.

தொடர்ந்து காரிய நிகழ்வுகளிலும் பங்கேற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதனை முடித்துக்கொண்டு, நேற்று மாலை 6.05 மணிக்கு சிலுவம்பாளையத்தில் இருந்து சென்னை புறப்பட்டார். இரவு 9.20 மணிக்கு அவர் சென்னை வந்தடைந்தார்.

இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை நடிகர் விஜய்சேதுபதி நேரில் சந்தித்தார். முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாள் காலமானதையொட்டி நேரில் சந்தித்து விஜய்சேதுபதி ஆறுதல் கூறினார். தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் படத்திற்கு விஜய்சேதுபதி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்