தமிழக செய்திகள்

நடிகை குஷ்பு ஆஸ்பத்திரியில் அனுமதி

பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு சமூக வலைத்தளங்களில் தன்னுடைய அரசியல், சினிமா சார்ந்த நிகழ்வுகள், குடும்ப நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

தினத்தந்தி

சென்னை,

பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு சமூக வலைத்தளங்களில் தன்னுடைய அரசியல், சினிமா சார்ந்த நிகழ்வுகள், குடும்ப நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இந்தநிலையில் குஷ்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், வேகமாக குணமாகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னை நன்றாக கவனித்து, சிகிச்சை அளித்து வரும் டாக்டர்களின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்கள் சிறப்பாக சிகிச்சை அளிப்பதாகவும், அவர்கள் சிறந்தவர்கள் என்றும் நன்றி பாராட்டியுள்ளார். ஆனால் குஷ்பு எதற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. குஷ்பு விரைவில் குணம் அடையவேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். காலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குஷ்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து