தமிழக செய்திகள்

போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் நடிகை சுருதி உள்பட 4 பேர் கைது

கோவையில் போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் நடிகை சுருதி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். #Actress

கோவை,

கோவையை சேர்ந்தவர் சுருதி (வயது 21). இவர் ஆடி போனா ஆவணி என்ற சினிமாவில் நடித்து உள்ளார். அந்த படம் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் அவர் திருமண ஆசைகாட்டி என்ஜினீயர்கள், பணக்கார வாலிபர்களை மடக்கி பலகோடி ரூபாய் மோசடி செய்தது அம்பலமானது.

இதனையடுத்து கடந்த 10-ந் தேதி சுருதி மற்றும் அவருடைய தாயார் சித்ரா, வளர்ப்பு தந்தை பிரசன்ன வெங்கடேஷ், தம்பி சுபாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மீண்டும் கைது

இதற்கிடையே சுருதியை கைது செய்தபோது, சுருதி, அவருடைய நண்பரான சபரிநாத் உள்பட 5 பேர் சேர்ந்து ஆயுதப்படை போலீஸ்காரரான சாகுல் ஹமீதுவை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சபரிநாத்தை கடந்த 10-ந் தேதி கைது செய்தனர்.

திருமண ஆசைகாட்டி பலரை ஏமாற்றிய வழக்கில் சுருதி உள்பட 4 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்ததால், போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் அவர்களை உடனடியாக கைது செய்ய முடியவில்லை. இதற்கிடையே, இந்த வழக்கில் சுருதி உள்பட 4 பேரை கைது செய்ய கோர்ட்டில் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தனர். அதற்கு கோர்ட்டு அனுமதி கொடுத்ததை தொடர்ந்து, நேற்று ரேஸ்கோர்ஸ் போலீசார் சுருதி உள்பட 4 பேரை கைது செய்தனர். இந்த தகவல் சிறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

பின்னர் 4 பேரும் கோவை கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட்டு வேலுசாமி அவர்கள் 4 பேரையும் வருகிற 13-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...