தமிழக செய்திகள்

நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக தாம்பரத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக தாம்பரத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

தினத்தந்தி

மதுரை,

நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு பண்டிகைகால சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.06003) வருகிற 13-ந் தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. காலை 9.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், நாகர்கோவிலில் இருந்து இந்த ரெயில் (வ.எண்.06004) வருகிற 17-ந் தேதி மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் சென்றடைகிறது.

இந்த ரெயிலில் தற்போது பயணிகளின் வசதிக்காக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 3-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள்-3, 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள்-11, பொதுப்பெட்டிகள் -7, 2 பார்சல் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். அதாவது, தலா 3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் மற்றும் பொதுப்பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்