சென்னை,
தென்மேற்கு ரெயில்வே பகுதிக்கு இயக்கப்படும் ரெயில்களான எம்.ஜி.ஆர். சென்டிரல்-கே.எஸ்.ஆர்.பெங்களூர் லால்பாக் விரைவு வண்டி (எண்-12607), எம்.ஜி.ஆர்.சென்டிரல்-மைசூரு அதிவிரைவு வண்டி (எண்-12609), எர்ணாகுளம் சந்திப்பு-கே.எஸ்.ஆர்.பெங்களூர் லால்பாக் அதிவிரைவு வண்டி (எண்-12678) ஆகிய ரெயில்களில் நாளை (வியாழக்கிழமை) முதல் 4 பொது 2-ம் வகுப்பு பெட்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கை கொண்ட 1 சரக்கு பெட்டி இணைக்கப்படுகிறது.
அதேபோல், தூத்துக்குடி-மைசூரு விரைவு வண்டி (எண்-16235) வருகிற 21-ந்தேதி முதல் மாற்றுத்திறனாளிகள் அமரும் இடம் மற்றும் சரக்கு பெட்டிகள் அடங்கிய 2-ம் வகுப்பு 2 பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
தெற்கு மத்திய ரெயில்வே பகுதிக்கு இயக்கப்படும் ரெயில்களான சென்டிரல்-பிட்ரகுண்டா விரைவு ரெயிலில் (வண்டி எண்-17238) 4 மெமு வகை மின்சார ரெயில் பெட்டிகள் இன்று (புதன்கிழமை) முதல் இணைக்கப்படுகிறது.
அதேபோல் சென்டிரல் விஜயவாடா பினாகினி அதிவிரைவு ரெயிலில் (வண்டி எண்-12712) 2-ம் வகுப்பு கொண்ட 6 இருக்கை வசதி கொண்ட பெட்டிகள், 2-ம் வகுப்பு சரக்கு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கை கொண்ட பெட்டிகள் நாளை (வியாழக்கிழமை) முதல் இணைக்கப்படுகிறது.
சென்டிரல்-திருப்பதி
மன்னார்குடி-திருப்பதி விரைவு ரெயிலில் (வண்டி எண்- 17408) 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட 2 பெட்டிகள், 2-ம் வகுப்பு வசதி கொண்ட 6 பெட்டிகள், 2-ம் வகுப்பு சரக்கு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான 2 பெட்டிகள் வருகிற 24-ந்தேதி முதல் இணைக்கப்படுகிறது.
அதேபோல் கோயம்புத்தூர்-திருப்பதி அதிவிரைவு ரெயிலில் (வண்டி எண்-22618) 6 பொதுப்பெட்டிகள், 2-ம் வகுப்பு சரக்கு பெட்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் அமரும் 2 பெட்டிகள் பிப்ரவரி 8-ந்தேதி முதல் இணைக்கப்படுகிறது.
சென்டிரல்-திருப்பதி விரைவு ரெயிலில் (வண்டி எண்-16203) 3 பொதுப்பெட்டிகள், 2-ம் வகுப்பு சரக்கு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான 2 பெட்டிகள் வருகிற பிப்ரவரி 20-ந்தேதி முதல் இணைக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவல்களை தெற்கு ரெயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.