தமிழக செய்திகள்

கூடுதல் பள்ளி கட்டிடம்

கூடுதல் பள்ளி கட்டிடத்தை தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

தினத்தந்தி

இளையான்குடி

இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் எஸ்.காரைக்குடி ஊராட்சியில் அங்கன்வாடி மையம் மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டிடம் தலா ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த புதிய கட்டிடங்களை தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் குழந்தை பாண்டியன் அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன், ஒன்றிய சேர்மன் முனியாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமரன், பாலசுப்பிரமணியன், கல்வித்துறை அதிகாரிகள், ஒன்றிய நிர்வாகிகள் காளிமுத்து, கருணாகரன் மற்றும் பலர் பங்கேற்றனர். 

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்