தமிழக செய்திகள்

கூடுதல் தண்ணீர் திறப்பு எதிரொலி: 134 அடியாக குறைந்த முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்

கூடுதல் தண்ணீர் திறப்பால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 134 அடியாக குறைந்தது

தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பருவமழை பெய்து வந்தது.

இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கடந்த 17-ந்தேதி நீர்மட்டம் 135.65 அடியாக உயர்ந்தது. இந்நிலையில் தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை குறைய தொடங்கியுள்ளது. மேலும் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்படுவதால் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது.

இதற்கிடையே அணையின் நீர்மட்டம் நேற்று 134.90 அடியாக இருந்தது. இந்நிலையில் இன்று அணையின் நீர்மட்டம் 134.65 அடியாக குறைந்தது. நீர்வரத்து வினாடிக்கு 1,262 கன அடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 1976 கன அடியாகவும் இருந்தது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்