தமிழக செய்திகள்

இடைக்காடர் சித்தர் ஜெயந்தி விழா

மானாமதுரையில் இடைக்காடர் சித்தர் ஜெயந்தி விழா நடந்தது

தினத்தந்தி

மானாமதுரை

தமிழ்நாட்டில் வாழ்ந்த 18 சித்தர்களில் ஒருவரான இடைக்காடர் சித்தரின் சொந்த ஊர் மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் கிராமம் ஆகும். இங்கு இடைக்காடர் சித்தருக்கு தனி கோவில் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று இடைக்காடர் சித்தர் கோவிலில் ஜெயந்தி விழா நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு இடைக்காட்டூரில் உள்ள இடைக்காடர் சித்தர் கோவிலில் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் புனிதநீர் கலசங்கள் வைத்து சிவாச்சாரியார்கள் யாகம் நடத்தினர். தொடர்ந்து பூர்ணாகுதி முடிந்து தீபாராதனை காட்டப்பட்டதும் புனித நீரால் இடைக்காடர் சித்தருக்கு 13 வகை திரவியங்களால் அபிஷேகங்களும் மலர் அலங்காரமும் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சித்தருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு