தமிழக செய்திகள்

ஆதிகேசவ பெருமாள் கோவில் தேர் திருவிழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு

விருத்தாசலம் அருகே நடைபெற்ற ஆதிகேசவ பெருமாள் கோவில் தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினத்தந்தி

விருத்தாசலம்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த காட்டுப்பரூரில் ஆதிகேசபெருமாள் கேவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 3-ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

அதைத் தெடர்ந்து தினந்தோறும், காலை, மாலையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சுவாமி வீதியுலா நிகழ்ச்சிகளும் நடந்து வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது. முன்னதாக ஆதி கேசவப் பெருமாளுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

பின்னர், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பெருமாள், பக்தர்கள் கோவிந்தா கோஷங்கள் எழுப்ப அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். அப்போது ஏராளமான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

இந்த தேரானது முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. அதை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்