தமிழக செய்திகள்

அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோரது மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் 7 நாட்கள் நடைபெற்ற வாதங்கள் ஜூன் 15-ஆம் தேதி நிறைவடைந்தன. இந்த நிலையில், பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 2022-ஆம் ஆண்டு ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. தீர்மானங்களின் அடிப்படையில் கட்சி செயல்பட்டு வருகிறது. எனவே, காலதாமதமாகத் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல என இபிஎஸ் தரப்பின் எழுத்துப்பூர்வமான வாதம் வைக்கப்பட்டது. இதுபோன்று, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தடுக்க முடியாது என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை