தமிழக செய்திகள்

சென்னை மாநகராட்சி 198-வது வார்டில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகி வெற்றி

சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை காரப்பாக்கம் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் லியோ என்.சுந்தரம். அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரான இவர், மீண்டும் தேர்தலில் போட்டியிட விரும்பினார்.

சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட 198-வது வார்டில் போட்டியிட அ.தி.மு.க.வில் விருப்ப மனு அளித்தார். ஆனால் அவருக்கு அ.தி.மு.க. தலைமை வாய்ப்பு வழங்கவில்லை. அந்த வார்டில் அ.தி.மு.க. வேட்பாளராக எம்.கே.பழனிவேல் நிறுத்தப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த லியோ சுந்தரம் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார்.

இந்த நிலையில், நடந்துமுடிந்த தேர்தலில் லியோ என்.சுந்தரம் 5 ஆயிரத்து 524 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். அ.தி.மு.க. வேட்பாளர் எம்.கே.பழனிவேல் 1,870 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

லியோ சுந்தரம், அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் தற்போது அவர் வெற்றி மகுடம் சூடி மீண்டும் கவுன்சிலராகி உள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து