தமிழக செய்திகள்

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை ஊர்வலம்

தோப்புத்துறையில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை ஊர்வலம் நடந்தது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே தோப்புத்துறை அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பள்ளியில் இருந்து ஊர்வலத்தை வட்டார கல்வி அலுவலர் ராஜமாணிக்கம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழுவினர், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசு பள்ளியை அடைந்தனர். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கோஷங்கள் எழுப்பி சென்றனர்.அதேபோல் வேதாரண்யம் பஸ் நிலையம், குரவப்புலம், கோடியக்கரை, கோடியக்காடு, மூலக்கரை, கரியாபட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் திரளான மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.