தமிழக செய்திகள்

அ.தி.மு.க. பிரமுகரை மிரட்டி வழிப்பறி

விழுப்புரத்தில் அ.தி.மு.க. பிரமுகரை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

விழுப்புரம் அருகே உள்ள கப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). கோலியனூர் ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரான இவர், நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் வந்துவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் கப்பூருக்கு புறப்பட்டார். விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் சென்றபோது அவரை பின்தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க 3 நபர்கள், திடீரென செந்தில்குமாரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் தாங்கள் வைத்திருந்த பீர் பாட்டிலை எடுத்து காண்பித்து செந்தில்குமாரை குத்தி விடுவதாக மிரட்டி அவரது சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்து 500-ஐ பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்து செந்தில்குமார், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்துச்சென்ற 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்