தமிழக செய்திகள்

நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.யாகவே செயல்படுகிறேன் - ஓ.பி.ரவீந்திரநாத்

நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க எம்.பி.யாகவே செயல்படுகிறேன் என்று நெல்லையில் ஓ.பி.ரவீந்திரநாத் கூறினார்.

தினத்தந்தி

நெல்லை,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஆடிதபசு விழாவில் கலந்து கொள்வதற்காக ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி. இன்று விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் நெல்லை வழியாக சங்கரன்கோவிலுக்கு சென்றார்.

செல்லும் வழியில் பாளைங்கோட்டை கே.டி.சி. நகரில் ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி.க்கு மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் தர்மலிங்கம், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் சிவலிங்கமுத்து ஆகியோர் தலைமையில் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

அப்போது ஓ.பி.ரவீந்திரநாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. எம்.பி.தான். நெல்லையில் எப்போதும் போல அ.தி.மு.க பலமாக உள்ளது. தொண்டர்கள் வழக்கம் போல் உற்சாகமாக வரவேற்பு அளித்து உள்ளனர்.

நாடாளுமன்றத்தில் நான் தொடர்ந்து அ.தி.மு.க எம்.பி.யாகவே செயல்பட்டு வருகிறேன், அதுதான் உண்மை.

தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்துக்கு எங்கள் தலைமை அலுவலகத்துக்கு அழைப்பு வந்துள்ளது. அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணைய கூட்டத்தில் கோவை செல்வராஜ் பங்கேற்பார் என அறிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு