தமிழக செய்திகள்

சாலை விபத்தில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பலி

திருவள்ளூர் சீமாவரம் சுங்கச்சாவடி அருகே லாரி மீது கார் மோதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் உயிரிழந்தார்.

தினத்தந்தி

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் அ.தி.மு.க. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ரவிக்குமார் தனது மனைவியுடன் இன்று காரில் வந்துகொண்டிருந்தார். இந்தநிலையில் இவர்களுடைய கார் சீமாவரம் அருகே லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ரவிக்குமார் பலியானார். மேலும் அவரது மனைவியும் அ.தி.மு.க. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான நிர்மலா காயமடைந்தார். உடனே அவர் மீட்கப்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து தொடர்பாக மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து