தமிழக செய்திகள்

அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

செங்கோட்டையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

செங்கோட்டை:

அ.தி.மு.க. மாநில மாநாடு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 20-ந்தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திரளாக கலந்து கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் செங்கோட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளரும், கடையநல்லுர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், கட்சியில் புதிய உறுப்பினாகள் சேர்க்கை மற்றும் மதுரையில் நடைபெற உள்ள மாநாட்டுக்கு நிர்வாகிகள், உறுப்பினாகளை அழைத்து செல்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.எம்.ராஜலட்சுமி, மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு